Tuesday, August 13, 2013

ஜாதீ

 • ------- தேவர் ,------- கோனார், ------- நாடார் ------- செட்டியார், ------- பிள்ளை, ன்னு பின்னால ஜாதி போட்ட பேர்களப் பாத்தாலே, இந்த ஆளுக்கு எப்படியும் 70 வயசாவது இருக்குமுன்னுதான் தோணும். ஏன்னா நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, இந்தத் தலமுறைல, சில ஜாதி வெறி பிடிச்ச அரவேக்காடுகளத் தவிர வேற யாரும் தன் பேருக்குப்பின்னால ஜாதி போடுறதில்ல.

  ஆனா சமீபத்துல ------ பறையனார், ------ மள்ளர், ------ தேவேந்திரகுல வேளாளர், அப்படின்னு, பேருக்குப்பின்னால ஜாதி போட்ட சில சுவரொட்டிகள சென்னைலயும், திருநெல்வேலிலயும் பாக்க முடிஞ்சுது. தாழ்தப்பட்ட, மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள்ன்னு சமூகத்தால சொல்லப் படுறவங்க இதுக்கு முன்னால தன் பேருக்குப் பின்னால ஜாதி போட்டுக்கிட்டதில்ல. அதுக்கான உரிமை முன்னால மறுக்கப் பட்டிருக்கலாம், அல்லது அப்படி போட்டுக்கிடுறது தங்களுக்கு அவமானமுன்னு அவங்களே நெனச்சிருக்கலாம். ஆனா இப்ப அவங்கள்ள சிலர் இப்படி பகிரங்கமாப் போட்டுக்கிட்டது ஆச்சரியமாவும், அதே சமயத்துல அதிர்ச்சியாவும் இருந்துச்சு.

  இப்படி இவங்க ஜாதி போட்டுக்கிட்டதுக்குப் பின்னால, ஜாதியா ஒன்றிணைறதால கிடக்கிற சிறு அரசியல் லாபமோ, அல்லது எங்க ஜாதிய நாங்களே மதிக்கலன்னா, வேற யாருதான் எங்கள மதிப்பாங்க? அப்படிங்கிற எண்ணமோ கூட காரணமா இருக்கலாம்.

  ஆனா நான் ஓண்ணு மட்டும் சொல்லிக்கிட விரும்புறேன் நண்பர்களே . . . ! தப்ப யாரு செஞ்சாலும் தப்புதான். சாக்கடய யாரு பூசிக்கிட்டாலும் நாறத்தான் செய்யும். ஜாதிங்கிற சாக்கடய நம்ம சமூகத்துல இருந்து அகற்றணுன்னா எல்லாரும் மனசு வச்சா மட்டுந்தான் முடியும்.

  மொதல்ல பேருக்குப் பின்னால உள்ள வால வெட்டித் தூறப் போடுங்க.

  வாலில்லாத மனிதர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

ஜாதீ

------- மேன்னன். -------- நாயர், --------- ரெட்டி, ---------- நாயுடு, -------- ராவ், -------- பண்டிட், --------- ஷெட்டி இப்படி பேருக்குப்பின்னால உள்ள வால்கள் பல விதமா உண்டு. ஆனா இது எதுவும் தமிழ் மாநிலத்துக்கு உட்பட்டதில்ல. இந்த வால்கள வச்சே இது எந்த மாநிலத்துக்குள்ளதுன்னு ஓரளவுக்கு யூகிக்க முடியும். இந்த வால்கள் மொதல்ல நுழஞ்சது சினித்துறை மூலமாத்தான். 

இங்க சில ஜாதி வெறி பிடிச்ச அரவேக்காடுகளத் தவிர வேற யாரும் தன் பேருக்குப்பின்னால ஜாதி போடுறதில்ல. தமிழ் நாட்டத் தாண்டி வெளில பாத்தா ஜாதிங்கிறது வலுவா வேர் பிடிச்சு நிக்கிறதப் பாக்க முடியுது. அவங்க ஊர்ல ‘இதுல்லாம் அசிங்கம்டா . . . மானமுள்ள மனுசனுக்கு இது அழகில்ல’ ன்னு சொல்லிக் கொடுக்குறதுக்கு ஒரு பெரியார் இல்லாமப்போனதுதான் காரணமா இருக்கலாம்.

ஆனா அந்த வெளி மாநிலக்காரனப் பாத்துப் பரிதாப்பபடாம, ஜாதிங்கிற அசிங்கத்த நம்ம ஊர் சினிமாக்காங்க சிலரும் அப்பிக்கிடுறதப் பாக்கும் போது வேதனயாத்தான் இருக்கு.

ஜாதீ

எங்க தாத்தா பெயருக்குப்பின்னால ஜாதி இருந்துச்சு. எங்க அப்பா தேவையான இடத்துல ஜாதி போட்டுக்கிட்டாரு. ஆனா நான் என் பேருக்குப்பின்னால எந்த இடத்துலயம் ஜாதி போடுறதில்ல. 

இதுதான் இண்ணக்கி இருக்கிற எல்லார் வாழ்கைலயும் நடந்திருக்கும். பேருக்குப்பின்னால ஜாதி போடுறத கேவலமாவும், அத ஓரு படிப்பறிவற்றவன் செயலாவும் கருதுற மனோநிலதான் அதுக்குக் காரணம். இந்த நில தமிழ் நாட்டுல உருவாகுறதுக்கு முக்கியக் காரணம் பெரியார்ங்கிற மகா மனுசன். 

ஆனா இண்ணக்கி வெகுசன மீடியால இருக்கிற சிலர் – ஷ் அய்யர், னனி அய்யர் ன்னு தன்ன அடயாளப்படுத்திக்கிடுறாங்க. இந்தக்கேவலத்தப்பாத்து கோவப்பட்டப்பதான் எனக்கொரு கவித தோணுச்சு

“பெயருக்குப் பின்னாலுள்ள
ஜாதீய வாலைக் கத்தரிக்காமல்
நாம்
பரிணாம வளர்ச்சி
அடைந்து விட்டதாய்ச் சொன்னால்
குரங்குகூடச் சிரிக்கும்.”

Thursday, July 12, 2012


"வார்த்தைகளுக்கு அப்பால்"

Beyond The Words - Part 3

முட்டாள் சம்பிரதாயங்களுக்கு 
உன்னத அர்த்தங்களிருப்பதாய் கற்பிக்கும் 
மத விற்பனையாளர்கள் . . . 

- ஓர் எளிய புரிதல்.

Monday, June 25, 2012

"வார்த்தைகளுக்கு அப்பால்"

Beyond The Words - Part 2

"இயற்கைக்கு மூளையில்லை"
இயற்கை பற்றிய ஓர் எளிய புரிதல்Thursday, June 14, 2012

"வார்த்தைகளுக்கு அப்பால்"

Beyond The Words - Part 1

நான் ஏன் கடவுளை மறுக்கிறேன்?
ஒரு சராசரி மனிதனின் எளிமையான புரிதால்.Wednesday, May 30, 2012

இதற்குமேலுமா கடவுளை நம்புகிறீர்கள் - கவிதைநீ பொய்யானவள் - கவிதை


நான் தனிமையில் இல்லை - கவிதை